உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடராஜர் திருவீதி உலா பக்தர்கள் வழிபாடு

நடராஜர் திருவீதி உலா பக்தர்கள் வழிபாடு

ஆத்தூர்: ஆத்தூர் கைலாசநாதர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி, அலங்கரிக்கப்பட்ட நடராஜர், மாட்டு வண்டியில் திருவீதி உலா வந்தார். ஆத்தூர் கைலாசநாதர் கோவிலில், ஆருத்ரா தரிசன உற்சவ நிகழ்ச்சி, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 10.30 மணியளவில், கைலாசநாதர், ஆதிபராசக்தி மற்றும் நடராஜர் ஸ்வாமிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், 11.30 மணியளவில், தங்க நகைகள், புஷ்ப அலங்காரத்தில், சிவகாம சுந்தரி உடனுறை நடராஜர் ஸ்வாமிகள், கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு, மாட்டு வண்டியில் திருவீதி உலா சென்றனர். அப்போது, ஆத்தூர் கடை வீதி, கைலாச நாதர் தெரு, பெரிய மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக, மாட்டு வண்டியில் வந்த நடராஜருக்கு, பூஜை பொருட்கள் கொடுத்து, பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஆத்தூர் நகர், கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.* ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், ஆருத்ர தரிசன விழாவையொட்டி, நடராஜர் ஸ்வாமி, புஷ்ப அலங்காரத்தில் திருவீதி உலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !