உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பருவம் என்றால் என்ன?

பருவம் என்றால் என்ன?

காப்பு என்பது சின்னஞ்சிறு குழந்தையைக் காப்பாற்றி அருள்செய்யும் படி பல்வேறு தெய்வங்களை வேண்டிப் பாடுவதாகும். ஒரு காலை மடக்கியும், ஒரு காலை நீட்டியும் இரு கைகளை தரையில் ஊன்றியும் தலையை அசைத்தாடும் பருவம் செங்கீரையாகும். குழந்தையைத் தொட்டிலில் இட்டு, நாக்கை அசைத்து ஒலியை எழுப்பி உறங்க வைக்கும் பருவம் தாலப்பருவம். குழந்தை தன் இரு கைகளையும் சேர்த்து ஓசை எழக் கொட்டும்படி கேட்கும் பருவம் சப்பாணி பருவம். பெற்றோர் குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்து முத்தம் தரும்படி வேண்டுவது முத்தப்பருவமாகும். தளர்நடையிடும் பிள்ளையை வருக! வருக! என்று அழைத்து மகிழ்வது வருகையாகும். அம்புலி என்றால் நிலா என்று பொருள். வானில் உலவும் நிலாவைக் குழந்தையோடு விளையாட அழைக்கும் பருவம் அம்புலி.

ஏழு பருவங்கள்: இருவகைப் பிள்ளைத்தமிழுக்கும் பத்து பருவங்கள் இருந்தாலும், ஏழு பருவங்கள் மட்டுமே பொதுவாக அமையும். மற்ற மூன்று பருவங்களும் வேறுபடும். காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய ஏழு பருவங்களும் இரண்டு பிள்ளைத்தமிழுக்கும் பொதுவானவை. சிற்றில் சிதைத்தல், சிறுபறை முழக்கல், சிறுதேர் உருட்டல் ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கு மட்டுமே வரும். பெண்பாற் பிள்ளைத்தமிழில் நீராடல், அம்மானை ஆடல், ஊசல் ஊடல் ஆகிய மூன்று பருவங்களும் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !