சுப்ரமணியர் கோவிலில் ரூ.98 ஆயிரம் காணிக்கை
ADDED :4412 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவில் உண்டியலில் பக்தர்களின் காணிக்கை தொகை எண்ணப்பட்டது.உளுந்தூர்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவில் உண்டியல் திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. அறநிலையத்துறை செயல் அலுவலர் முத்துலட்சுமி முன்னிலையில் தக்கர் திவாகரன், முக்கியஸ்தர்கள் ராஜேந்திரன், முருகன், பிரகாஷ், சண்முகசுந்தரம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில் ரூ. 98 ஆயிரத்து 310 பணமும், 5 கிராம் தங்க நகைகள் இருந்தன. இந்த காணிக்கைகள் கருவூலத்தில் சேர்க்கப்பட்டன.