உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூலநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

மூலநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

பாகூர்:பாகூர் மூலநாதர் கோயிலில், ஆருத்ரா தரிசன வழிபாடு நடந்தது.பாகூரில் 1,400 ஆண்டுகள் பழமையான வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆருத்ரா தரிசன வழிபாடு நடந்தது. அதிகாலை 3:30 மணிக்கு வேதாம்பிகை அம்மன், மூலநாதர், விநாயகர், முருகன், சண்டிஸ்கேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, 4.00 மணிக்கு கலசஸ்தாபனமும், 5:30 மணிக்கு கோயில் மகா மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாள், மாணிக்க நடராஜர் எழுந்தருள செய்யப்பட்டு மகா அபிஷேகம் நடந்தது. 8:30 மணிக்கு ஆருத்தரா தரிசனம் நடந்தது.திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !