உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

திருவாரூர்: வலங்கைமான் அருகே, வீடு கட்ட கடக்கால் தோண்டியபோது, இரு ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. திருவாரூர் மாவட்டம், கீழ நல்லூரில் உள்ள, பழமை வாய்ந்த சிவன் கோயில் அருகில், தனியாருக்குச் சொந்தமான இடத்தில், வீடு கட்ட டிச 19, கடக்கால் தோண்டப்பட்டது. அப்போது, மண்வெட்டியில் வித்தியாசமான சத்தம் கேட்டது. அந்த இடத்தில், ஐம்பொன்னாலான விநாயகர் மற்றும் சூரியன் சிலைகள் கிடைத்தன. அப்பகுதியினர், தாசில்தார் அலுவலத்திற்கு தகவல் தெரிவித்தனர். தாசில்தார் விசாரணை நடத்தி, இரு சிலைகளையும், வலங்கைமான் தாலுகா அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !