ராமேசுவரம் ராமநாதசுவாமிக்கு 1008 வெள்ளி கலச புனித நீர் அபிஷேகம்
ADDED :4321 days ago
ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் மைசூர் பகுதியைச் சேர்ந்த கைலாஷ் ஆசிரமத்தின் நிர்வாகி ஜெயந்திரபுரி என்பவர், உலக நன்மைக்காக கோயிலின் காசி விசுநாதர் ஆலயம் முன்பாக 1008 வெள்ளி கலசங்களில் கோடி தீர்த்தம் நிரப்பி, சிவலிங்க உருவத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர், சுவாமி சன்னதி கருவறையில் ராமநாத சுவாமிக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.