பரமத்தி வேலூர் அழகுநாச்சியம்மன் கோயிலில் மகா யாகம்
ADDED :4323 days ago
பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அழகுநாச்சியம்மன் கோயிலில் உலக நன்மைக்காகவும், மக்களின் பிரச்னைகள் நீங்கவும் வேண்டி நவாஹரி சம்புடித துர்கா மகா யாகம் நடத்தப்பட்டது. விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு நெய், பால், தேன், பஞ்சாமிர்தம், பலரசம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேக ஆராதனைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.