திருப்பரங்குன்றம் சமணர் குகையில் தூய்மைப்பணி!
ADDED :4329 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் போற்றுவோம் எனும் நிகழ்ச்சி, ஜன.,25, 26ல் நடக்கிறது. அதற்காக அமைக்கப்பட்ட பல்வேறு அமைப்பு, தொண்டு நிறுவனங்களை சேர்ந்த குழு, ஊரின் வரலாற்று ஆவணங்கள், போட்டோ ஆதாரங்களை சேகரித்து வருகின்றது. இதன் ஒருபகுதியாக, புராதன சின்னங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மலையின் மேற்கு பகுதியிலுள்ள சமணர் படுகையை தூய்மைப்படுத்தினர். பாதையை மறைத்துள்ள முட்செடிகளையும் அகற்றினர். கல்வெட்டு குகைக்கோயில் பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர். நிர்வாகிகள் ஜீவா, சென்றாயன், சுகந்தகுமார், மோகன்தாஸ், சுந்தரவடிவேல், வடிவேல், மாணிக்கம், சசிக்குமார் கலந்து கொண்டனர்.