ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா
ADDED :4336 days ago
திருச்செந்தூர்: திருச்செந்தூர் ஆனந்த வல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, கோ பூஜை, ஆருத்ரா தரிசனம் சிவாச்சார்யார்கள் வேத பாராயணமும், தில்லை நடராஜன், வேலாண்டி ஆகியோர் திருவெம்பாவை பாடல்களும் பாடினர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.