புதுக்குடி கோயிலில் இன்று லட்சார்ச்சனை
ADDED :4336 days ago
வீரவநல்லூர்: புதுக்குடி மேலக்கொழுந்து மாமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மூன்றாம் ஆண்டு லட்சார்ச்சனை, புஷ்பாஞ்சலி நடக்கிறது. முதல் நாள் காலை கணபதி ஹோமம், லட்சார்ச்சனை ஆரம்பம், தீப ஆராதனை, மகாலட்சுமி ஆராதனை நடந்தது. இன்று இரண்டாம் நாள் லட்சார்ச்சனை, சிறப்பு அன்னதானம், புஷ்பாஞ்சலி, இடும்பன் ஆராதனை, புதுக்குடி, காருகுறிச்சி பகுதிகளில் பாலசுப்பிரமணிய சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் அர்ச்சகர் சேதுராம ஐயர் செய்து வருகின்றனர்.