நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோயிலில் பவுர்ணமி பூஜை
ADDED :4336 days ago
உடன்குடி: நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோயிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. உடன்குடி அருகே நங்கைமொழி ஞானபிரசன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் கோயில் தென் பகுதியின் ராகு-கேது பரிகாரஸ்தலமாக விளங்கிவருகிறது. இக்கோயிலில் பவுர்ணமி பூஜையை முன்னிட்டு காலை சுவாமிக்கு பால்,தயிர், மஞ்சள், பல மணப்பொடி, சந்தனம், திருநீர், குங்குமம், பன்னீர், இளநீர் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையும், அன்னதானம் நடந்தது. நல்ல மழை வேண்டி திருவிளக்கு பூஜையும்,சிறப்பு பூஜையும் நடந்தது. ஏற்பாடுகளை பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்.