உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்க ரதத்தில் விவேகானந்தர் உலா

தங்க ரதத்தில் விவேகானந்தர் உலா

ஆர்.கே.பேட்டை: விவேகானந்தர் சிலை, நான்கு குதிரை பூட்டிய தங்க ரதத்தில் ஊர்வலம் வந்தது. அரசு பள்ளி மாணவர்கள், கோலாட்டத்துடன் வரவேற்றனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம், சாது சங்கர மடத்திற்கு, தங்க ரத்தில், விவேகானந்தர் சிலை வந்தது. விவேகானந்தர் 150வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, அம்மையார் குப்பம் வந்த சுவாமி ரதத்தை, அரசு பள்ளி மாணவ, மாணவியர் வரவேற்றனர். பின், சாது சங்கர மடத்தில், சுவாமி எழுந்தருளினார். கிராம மக்கள், தேங்காய் பழத்துடன், தீப ஆரத்தி எடுத்து சுவாமியை வழிபட்டனர். விவேகானந்தர் சேவா சங்கத்தினர், விவேகானந்தரின் போதனைகள் குறித்து, பொதுமக்களிடையே துண்டு பிரசுரம் வழங்கியும், பேருரை ஆற்றியும் விளக்கினர். பிறகு, அத்திமாஞ்சேரி பேட்டைக்கு ரதம் புறப்பட்டு சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !