திருத்தேரில் ஐயப்பன் வீதி உலா
ADDED :4412 days ago
வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி கோவிலின் 28ம் ஆண்டு மண்டல பூஜைத்திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், நேற்றுமுன்தினம் இரவு 7.00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோவிலிருந்து மின்விளக்கால் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பன், திருத்தேரில் எழுந்தருளி, வால்பாறை நகர் முழுவதும் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை அகிலபாரத ஐயப்ப சேவாசங்க நிர்வாகிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.