துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை
ADDED :4342 days ago
வால்பாறை: வால்பாறை துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மனுக்கு, செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடக்கிறது. விழாவில், நேற்று மாலை 4.00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக பூஜை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.