ஆன்மிக சேவைக்கு விருது
ADDED :4412 days ago
உடுமலை: ஸ்ரீ ஐயப்பன் சேவா ரத்னம் விருது, உடுமலையை சேர்ந்த மாரிமுத்துவுக்கு வழங்கப்பட்டுள்ளது. உடுமலை ஆர்.கே.ஆர்., வீதியில் உள்ள ஐயப்பன் கோவிலில், பஜனை நிகழ்ச்சி மற்றும் ஆன்மிக சேவையாற்றி வரும், மாரிமுத்துவுக்கு, உடுமலை இந்து சாம்ராஜ்யம் மக்கள் இயக்கம் மற்றும் வல்லரசு மக்கள் சேவா சமிதி அமைப்புகள் சார்பில், ஸ்ரீ ஐயப்பன் சேவா ரத்னம் விருது வழங்கப்பட்டது. இதற்கான விழா, கோவில் வளாகத்தில் நடந்தது. இந்து சாம்ராஜ்யம் மக்கள் இயக்க பொது செயலாளர் சக்திவேல் விருது வழங்கினார். ஆன்மிகக் குழுவைச்சேர்ந்த அழகர்சாமி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஹரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.