உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் அருகே மழை வேண்டி ஏரியில் பூஜை

திருப்போரூர் அருகே மழை வேண்டி ஏரியில் பூஜை

திருப்போரூர்: திருப்போரூர் அருகே, கிராமத்தினர் மழை வேண்டி, ஏரியில் பொங்கல் வைத்து, சேவலை பலியிட்டு சிறப்பு பூஜை நடத்தினர். திருப்போரூர் அடுத்து உள்ளது, தண்டலம் கிராமம். இங்கு, 50 ஏக்கர் பரப்பு கொண்ட பெரிய பொதுப்பணித் துறை ஏரி உள்ளது. குறைந்த நீர் மட்டுமே இருப்பதால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மழை வேண்டி சிறப்பு பூஜை செய்ய கிராமத்தினர் முடிவு செய்தனர். நேற்று மாலை, 4:00 மணி அளவில், ஏரியில் கூடி பம்பை, உடுக்கை பாடல்களுடன், பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். திருஷ்டியை கழிக்க ஒரு சேவலையும் பலியிட்டனர். கிராமத்து பெண்கள் ஒவ்வொருவராக கையில் வேப்பிலை தட்டுடன் வானத்தை நோக்கி, ஆராதனை காட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !