வத்திராயிருப்பு காசி விஸ்வநாதசுவாமி கோயிலில் அஷ்டமி பிரதக்ஷன வழிபாடு
ADDED :4388 days ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதசுவாமி கோயிலில், அஷ்டமி பிரதக்ஷன வழிபாடு நடந்தது.அதிகாலையில் சுவாமி, விசாலாட்சியம்மனுக்கு, 18 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கோயில் மையமண்டபத்தில், பூரணகும்பம் வைத்து, பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சந்திரசேகரசுவாமி, கோமளாம்பிகை அம்மன், காளைவாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றனர். இறைவன், சகல ஜீவராசிகளுக்கும் உணவு வழங்கியதை நினைவு படுத்தும் வகையில், சப்பரம் செல்லும் பாதை முழுவதும், அரிசி தூவப்பட்டது. மீண்டும் கோயிலை சென்றடைந்த சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். ஏற்பாடுகளை சேதுசுந்தரப்பட்டர், ராஜசேகர், கார்த்திகேயன், காமேஷ்வரப்பட்டர், கோயில் நிர்வாக அதிகாரி லதா செய்தனர்.