கொர் போட நல்ல திசை!
ADDED :4429 days ago
நீங்கள் உறங்குவதற் கேற்ற நல்ல திசை, இடத்தைப் பொறுத்து மாறுபடும்.
*நீங்கள் உங்கள் வீட்டிலேயே இருந்தால் கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது தான் சிறந்தது.
*மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளீர்கள் என்றால், தெற்கு திசையில் தலை வைத்து படுங்கள். இது தாய்மாமனார், சிறிய, பெரிய மாமனார், பெண்ணைக் கொடுத்த மாமனார் என எல்லாருக்கும் பொருந்தும்.
*வெளியூர் சென்றாலோ, வெளியிடங்களில் லாட்ஜ், உறவுக்காரர்கள் வீடு என தங்கினாலோ மேற்கு நோக்கி தலைவைக்கலாம்.
*எங்கு போனாலும், தலை வைக்கக்கூடாத ஒரே திசை வடக்கு தான். இந்த தகவலை நமக்கு தெரிவிப்பவை தர்மசாஸ்திரமும், வாஸ்து சாஸ்திரமும் ஆகும்.