உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் கைலாஷ் ஆன்மிக கண்காட்சி!

மதுரையில் கைலாஷ் ஆன்மிக கண்காட்சி!

மதுரை: மதுரை ஆண்டாள்புரம் வசுதரா வளாகத்தில், பாரதி சுற்றுப்புறச்சூழல் அறக்கட்டளை சார்பில், நேற்று கைலாஷ் ஆன்மிக கண்காட்சி துவங்கியது. டிச.,29 வரை நடக்கும் இக்கண்காட்சியில், ஆன்மிக கலை பொருட்கள், அதிர்ஷ்ட கல், மோதிரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கோயில்களில் பயன் படுத்தும் கண்ணாடி விளக்கு கூண்டு, எலக்ட்ரானிக் மணி, சாம்பிராணிகள் விற்பனைக்கு உள்ளன. தினமும் இரவு 7 மணிக்கு இளசை சுந்தரம் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்துகிறார். மேலும், இலவச ஜோதிட, வாஸ்து, யோக, சித்த மருத்துவம் தொடர்பான சிறப்பு ஆலோசனை வழங்கப்படுகிறது. பூஜை அறையை அலங்கரிக்கும் பஞ்சலோக சிலைகளையும் கண்காட்சியில் "தரிசிக்கலாம். காலை 10.30 முதல் இரவு 8.30 வரை கண்காட்சியை பார்வையிடலாம். அனுமதி இலவசம். விபரங்களுக்கு: 85089 76150.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !