கோத்தகிரியில் ஐயப்பன் கோவில் விழா
ADDED :4398 days ago
கோத்தகிரி: கோத்தகிரியில் ஐயப்பன் திருவீதி உலா நடந்தது. கோத்தகிரி பஜாரில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில், சபரிமலை மண்டல பூஜையை முன்னிட்டு, நேற்று முன்தினம், அதிகாலை முதல் சிறப்பு பூஜை நடந்தது. இந்நிகழ்ச்சியில், விரதம் மேற்கொண்டுள்ள ஐயப்ப பக்தர்கள் உட்பட பலர் பங்கேற்று வழிப்பட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஐயப்பன் திருவீதி உலா நடந்தது. கோவிலில் இருந்து, புறப்பட்ட திருவீதி உலா, செண்டை மேளத்துடன், நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து, மீண்டும் கோவிலை அடைந்தது.