கோலாபூர் மகாலட்சுமி கோயிலில் சூரிய ஒளி திருவிழா!
சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கோலாபூர் மகாலட்சுமி கோயிலின் கட்டட அமைப்பு மிகவும் ஆச்சரியத்திற்கு உரியது. சூரிய மறையும் போது அதன் கதிர்கள் ஜன்னல் வழியாக வந்து அன்னையின் பாதத்தை தோட்டு செல்லும் அமைப்பு மிகவும் ஆச்சரியம்.
இத்திருவிழாவை ஆயிரக்கணக்கானோர் கிரன் உற்சவம் என்று கொண்டாடப்படுகிறார்கள். இத்திருவிழா வருடத்தில் ஜனவரி 31 , பிப்ரவரி 1, பிப்ரவரி 2, நவம்பர் 9, நவம்பர் 10, நவம்பர் 11 மாலை சூரிய அஸ்தமிக்கும் நேரத்தில் கொண்டாடப்படுகிறது. வருடத்திற்கு இருமுறை சூரிய பகவான் அன்னை மகாலட்சுமிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. சூரிய ஒளி அன்னை மகாலட்சுமியின் உடலில் விழுவது ஒன்றும் ஆச்சரியமில்லை. இது போன்ற காட்சிகளை தரிசிப்பதன் மூலம் மனிதனின் வாழ்கை வெளிச்சம் மற்றும் செழிப்பாக மாறுவதை அறியலாம்.
இத்திருவிழா சன்னதியில் சூரிய ஒளி நேரடியாக விழும் போது கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 31 மற்றும் நவம்பர் 9: சூரிய ஒளி அம்மனின் பாதத்தில் விழுகிறது.
பிப்ரவரி 1 மற்றும் நவம்பர் 10: சூரிய ஒளி அம்மனின் மார்பு பகுதியில் விழுகிறது.
பிப்ரவரி 2 மற்றும் நவம்பர் 11: சூரிய ஒளி அம்மனின் முழு உடலிலும் விழுகிறது.