இல்லாத திசையே இல்லை!
ADDED :4345 days ago
கைலாயத்தில் அவ்வையார், சிவாயநம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை என்று சொல்லி சிவனை வணங்கினாள். வயதாகி விட்டதால், கீழே அமர்ந்து கால் நீட்டிக் கொண்டாள். உமையவள் அதைக் கண்டு, அவ்வையே! சுவாமி இருக்கும் திசை நோக்கி கால் நீட்டியிருக்கிறாயே! இது சரிதானா? என கோபமாக கேட்டாள். இதற்கு பாட்டி, தேவி! சுவாமி இல்லாத திசையை நீயே காட்டு. அதை நோக்கி கால் நீட்டுகிறேன், என பதிலளித்தாள். பார்வதி நாலாபுறமும் திரும்பிப் பார்த்தாள். எங்கும் சிவபெருமான் நிறைந்திருப்பதைக் கண்டாள். எல்லாம் சிவமயம் என்பதை உணர்ந்து கொண்டாள்.