உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா பெரியவர் ஆராதனை மஹோற்சவம்!

மகா பெரியவர் ஆராதனை மஹோற்சவம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தில், மகா பெரியவர் ஆராதனை மஹோற்சவம் நேற்று வெகு சிறப்பாக நடந்தது. சங்கர மடத்தில், 68வது பீடாதிபதியாக இருந்த, ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 20வது வார்ஷிக ஆராதனை மஹோற்சவம், நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இச்சிறப்பு வழிபாட்டை யொட்டி, சங்கர மடம், தேனம்பாக்கம் சிவஸ்தானம், சாலைத் தெருவில் உள்ள ஸ்ரீமஹா சுவாமி தரிசன மண்டபம் ஆகிய வற்றில் விசேஷ அபிஷேகம், ஆராதனை, தீபாராதனை, வித்வத் சதஸ், ஸ்ரீஏகாதச ருத்ர ஜெபம், வேத பாராயணம், ஹோமங்கள், அன்னதானம் நடந்தன. சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மடத்தில் உள்ள அதிஷ்டானத்தில் வழிபட்டனர். இரவு, 8:00 மணிக்கு, சாலைத் தெருவிலிருந்து மஹா சுவாமிகளின் உருவப்படம், புஷ்ப பல்லக்கில் அலங்கரிக்கப் பட்டு, நான்கு ராஜவீதிகளை வலம் வந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !