வன்னிய பெருமாள் கோவிலில் 1ம் தேதி அனுமந் ஜெயந்தி!
ADDED :4338 days ago
புதுச்சேரி: வன்னிய பெருமாள் கோவிலில் அனுமந் ஜெயந்தி மற்றும் தீபத்திருவிழா 31ம் தேதி துவங்குகிறது. முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் அனுமந் ஜெயந்தி மற்றும் ஆறாம் ஆண்டு தீப திருவிழா வரும் 31ம் தேதி துவங்குகிறது. அன்று மாலை 6;00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. 1ம் தேதி மாலை 6:00 மணிக்கு வெண்ணெய்காப்பு அலங்காரமும், 6ம் ஆண்டு தீப திருவிழாவும் நடக்கிறது. 2ம் தேதி மாலை 1008 வடமாலை சாற்றுதல், சிறப்பு பஜனையுடன் சாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.