உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நூற்றாண்டு கடந்த மண்டபம் பராமரிப்பின்றி பாழாகிறது!

நூற்றாண்டு கடந்த மண்டபம் பராமரிப்பின்றி பாழாகிறது!

பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான, நூற்றாண்டு கடந்த மண்டபத்தை பாதுகாக்க, தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகூரில் 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வேதாம்பிகை சமேத மூல நாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது. ஆண்டுதோறும் "தை மாதம், சோரியாங்குப்பம் தென் பெண்ணையாற் றில் நடைபெறும் தீர்த்தவாரியில் பங்கேற்கும் மூல நாத சுவாமி, அங்குள்ள நூற்றாண்டு கடந்த மண்ட பத்தில் எழுந்தருளி, பக்தர் களுக்கு அருள்பாலிப்பார். பழமைவாய்ந்த அந்த மண்டபத்தை, தொல்லியல் துறையும், மாநில அரசும் கண்டுகொள்ளாமல் விட்டன. தற்போது, இந்த கட்டடத்தின் மீது மரங்கள் வளர்ந்து, விரிசல்கள் ஏற்பட்டு, இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றங்கரையில் உள்ள, நூற்றாண்டு கடந்த, மண்டபத்தை புனரமைக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !