மடப்புரம் காளி கோவிலில் பூட்டிக்கிடக்கும் பாதுகாப்பு அறை!
திருப்புவனம்: திருப்புவனம் மடப்புரம் காளிகோயிலில் கட்டி முடித்து மூன்று ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் பொருட்கள் பாதுகாப்பு அறையை பயன்படுத்த முடியாமல் பக்தர்கள் தவிக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது மடப்புரம் காளி கோயில். தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்றது.செவ்வாய்,வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். குளித்து விட்டு நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்கள் தாங்கள் கொண்டுவரும் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பொருட்கள் வைப்பு அறை கட்டப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுக்கு முன் கட்டிய கட்டடத்தை இன்னும் திறக்காமல் உள்ளனர்.வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் பொருட்களை பாதுகாப்பாக வைக்க முடியாமல் தவிக்கின்றனர். கோயில் நிர்வாகம் பூட்டிக்கிடக்கும் பொருட்கள் பாதுகாப்பு அறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.