திருத்தணி முருகன் கோவிலில் சேவை கட்டணம் உயர்வு
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் சேவைகளுக்கு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்: பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில், மூலவருக்கு, பால், விபூதி, பன்னீர், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் போன்ற சிறப்பு அபிஷேகங்களுக்கு உரிய கட்டணம் செலுத்தி வழி படுகின்றனர். மேலும், சந்தனக்காப்பு, வெள்ளி ரதம், வெள்ளி மயில் வாகனம், தங்க ரதம், திருக்கல்யாணம், கேடயம் மற்றும் தங்க காப்பு போன்ற உற்சவங்கள் செய்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
ரூ.1,300 வரை இந்நிலையில், பல ஆண்டுகளாக இதற்கான சேவைக் கட்டணங்கள் உயர்த்தப்படாமல் இருந்தது. தற்போது, சேவை கட்டணங்கள், 250 ரூபாய் முதல், 1,300 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, பத்து நாட்களுக்கு முன் அமலுக்கு வந்துள்ளது. தற்போது இந்த சேவை கட்டணங்கள் குறித்த விளம்பர பலகைகள், தேவஸ்தான குடில்கள், மலைக்கோவில் வளாகம், சுந்தர விநாயகர் கோவில் ஆகிய இடங்களில், பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சேவை கட்டண விவரம்:
சேவை விவரம் பழைய காணிக்கை புதிய காணிக்கை
ரூபாய் ரூபாய்
சந்தனக் காப்பு 3,251 4,000
வெள்ளி ரதம் 2,200 3,500
வெள்ளி மயில் வாகனம் 2,000 3,500
தங்க ரதம் 1,250 2,000
திருக்கல்யாண உற்சவம் 1,100 2,000
பஞ்சாமிர்த அபிஷேகம் 600 1,000
கேடயத்தில்சுவாமி புறப்பாடு 500 1,000
தங்க கவசம் சாத்துபடி 250 500
பால், விபூதி, பன்னீர்,
தயிர், சந்தனம், இளநீர்
(ஒவ்வொன்றுக்கும் 100 100
மாற்றம் இல்லை).