தர்மபுரி கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :4342 days ago
தர்மபுரி: தர்மபுரியில் உள்ள பல்வேறு கோவில்களில், புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கடந்த, 2013ம் ஆண்டு முடிந்து, 2014ம் ஆண்டு பிறப்பை, மக்கள் அனைவரும் இன்று மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். புத்தாண்டை முன்னிட்டு, தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்ரமணிய ஸ்வாமி கோவில், நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில், கோட்டை பரவாசுதேவர், காரிமங்கலம் அபித குஜாம்பாள் அருணேஸ் வரர், கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.