உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலைக்கு 14 டன் காய்கறி!

சபரிமலைக்கு 14 டன் காய்கறி!

ஊட்டி: சபரிமலையில் ஆண்டுதோறும் நவம்பர் 16ம் தேதியில் இருந்து, ஜனவரி 18ம் தேதி வரை, 60 நாட்களுக்கு அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில், கடந்த 6 ஆண்டுகளாக அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக நீலகிரி மாவட்டம் ஐயப்ப சேவா சங்கம் சார்பில், மாவட்டத்தில் இருந்து 70 டன் காய்கறிகள் 6 லாரிகளில் 10 நாட்களுக்கு ஒருமுறை வீதம் அனுப்பி வைக்கப்படுகிறது. அனைத்தும் நன்கொடையாக பெறப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது.இதில், நேற்று முன்தினம் ஊட்டி ஐயப்பன் கோவில் பகுதியில் இருந்து 14 டன் காய்கறிகள் கொண்டுசெல்லப்பட்டன.இதில், நீலகிரி மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்க தலைவர், செயலாளர் நஞ்சுண்டன், மாவட்ட அமைப்பு செயலாளர் சிவக்குமார், மாவட்ட தொண்டர் படை துணை தளபதி வாசுதேவன் ஆகியோர் தலைமையில், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் பங்கேற்று, அனுப்பி வைத்தனர். ஜனவரி 12ம் தேதி சபரிமலையில் ஒரு நாள் அன்னதானம் முழுவதும், நீலகிரி மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !