உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஞ்சூரில் அய்யப்பன் விளக்கு பூஜை கோலாகலம்

மஞ்சூரில் அய்யப்பன் விளக்கு பூஜை கோலாகலம்

மஞ்சூர் : மஞ்சூரில் அய்யப்பன் விளக்கு பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மஞ்சூரில் 50வது ஆண்டு, ஐயப்பன் விளக்கு பூஜை நேற்று முன்தினம் துவங்கியது. இதனை தொடர்ந்து, காலை 6:00 மணிக்கு கணபதி பூஜை, பகல் 3:00 மணிக்கு அலங்கரித்த புலி வாகனம், பஞ்சவாத்தியம், சிங்காரி மேளம், செண்டை மேளம், தெய்யம், பூக்காவடி, கேரளா பேண்டு வாத்தியம் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக குந்தா சிவன் கோவிலுக்கு வந்தனர். பின், பாலக்கொம்பு எடுத்து மேளங்கள் முழங்க விளக்கு ஊர்வலம் பூஜை கோவிலை வந்தடைந்தது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பாலக்காடு தேங்குரிசி ஹரிதாஸ் சுவாமிகள் தலைமையில் உடுக்கையடி பாடல் அய்யப்பன் வரலாறு நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு பால்கிண்டி எடுத்தல், குண்டம் இறங்குதல், திரி உழிச்சல், வாவர் துள்ளல் விளையாட்டு நிகழ்ச்சி நடந்தது. காலை 6:00 மணிக்கு மறு பூஜை ஆராதனை, மங்களம் நிகழ்ச்சி யுடன் விழா நிறைவு பெற்றது.

ஊட்டி: ஊட்டி காந்தள் பகுதியில் உள்ள மூவுலகரசியம்மன் கோவிலில் நேற்று 5ம் ஆண்டு படிபூஜை மற்றும் 3ம் ஆண்டு சிறப்பு நிறமாலை பூஜை நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பஜனை, காலை 7:30 மணிக்கு சிறப்பு படிபூஜை, தீபாராதனை நடந்தது. 8:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், காந்தள் காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து நிறமாலை பூஜைக்கான மலர்களை, பஞ்சவாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக மூவுலகரசியம்மன் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, மணிகண்ட வேத சாஸ்தாவிற்கு நிறமாலை பூஜை, பஜனை, மகா தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை அம்மன் சேவா சங்கத்தினர் மற்றம் அய்யப்ப பக்தர்கள் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !