உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாமியார் மலையில் சிறப்பு பூஜைகள்

சாமியார் மலையில் சிறப்பு பூஜைகள்

பந்தலூர்: பந்தலூர் அருகே மழவன்சேரம்பாடி சேரங்கோட்டா, சாமியார் மலையில் உள்ள கிருஷ்ணானந்தகிரி ஆசிரமத்தில் புத்தாண்டு தின விழா நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம், சமாதி மண்டபத்தில் பூஜை, மலர்அர்ச்சனை, காலை 7:00 மணி முதல் சிறப்பு பூஜைகள் பிரம்மஸ்ரீ ஓம்காரனந்தா தலைமையில் நடந்தது. தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு ஐயப்ப பக்தர்களின் பஜனை நடந்தது. சுமார் 300 அடி உயரமுள்ள சாமியார் மலையின் பாறையில் வற்றாத நிலையில் வரும் ஊற்றுநீர் மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நடந்த பூஜைகளில், மழவன்சேரம்பாடி, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, அம்பலமூலா, எருமாடு, சேரம்பாடி, பந்தலூர், உப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைவர் கோபி, செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சிவஞானம் உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !