மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் தைப்பூச விழா துவக்கம்
ADDED :6 hours ago
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் முன்னிட்டு நேற்று தர்மலிங்கேஸ்வரருக்கு, அரிசி மாவு, திருமஞ்சள், மஞ்சள், வில்வம், நெல்லி, அருகம்புல், தாமரை, பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், தயிர், எலுமிச்சை பழ சாறு, இளநீர், கரும்பு சாறு, சந்தனம், பன்னீர், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. வரும் பிப், 1ம் தேதி தைப்பூசத்தன்று காலை, 8:00 முதல் மாலை, 4:00 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்லலாம். காலை, 10:30 மணிக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது.