ரெங்கநாத கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா
ADDED :4339 days ago
கரூர்: அபயபிரதான ரெங்கநாதசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதலாம் திருநாள் பகல் பத்து நிகழ்ச்சியாக நேற்று மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை அர்ச்சாவதாரம் நடைபெற்றது. தொடர்ந்து, பகல் பத்து நிகழ்ச்சியாக ஜன. 10-ம் தேதி வரை அர்ச்சாவதாரமும், 11-ம் தேதி வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.