உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேய ஜெயந்திக்கு"வடை மாலை வழிபாடு

ஆஞ்சநேய ஜெயந்திக்கு"வடை மாலை வழிபாடு

துறையூர்: ஆங்கில புத்தாண்டு பிறப்பு, ஹனுமந்த் ஜெயந்தி, அமாவாசை என, முக்கிய நிகழ்ச்சிகள் புதன் கிழமை வந்ததில், அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது. புத்தாண்டு பிறந்த நள்ளிரவில், துறையூரில் புனித ராயப்பர் சின்னப்பர் தேவாலயத்திலும், சி.எஸ்.ஐ. பவுல் ஆலயம் உள்பட, கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. புத்தாண்டு பிறப்பன்றே ஹனுமந்த் ஜெயந்தி வந்ததால், துறையூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு அலங்காரம் வடைமாலை, வெண்ணெய் காப்பு, துளசி வெற்றிலை மாலை அணிவித்து வழிப்பட்டனர்.துறையூர் சத்ய நாராயண பெருமாள் கோவிலில் உள்ள பக்த ஆஞ்சநேயருக்கு, 19வது ஆண்டு, 9ம் நாள் நடந்த, ஜெயந்தி விழாவில், சிறப்பு ஹோமம் செய்து வழிபட்டனர். துறையூர் காமராஜர் நகர் அருகில் உள்ள வீர ஆஞ்சநேயர், 69வது ஆண்டு ஜெயந்தி விழாவில், விஸ்வரூப தரிசனம், தேர் வடம் பிடித்தல், புஷ்ப அலங்காரத்துடன் சுவாமி திருவீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !