பாபநாசம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
பாபநாசம்: வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பாபநாசம் அருகே கபிஸ்தலம் வடக்கு செங்குந்தர் தெருவில் எழுந்தருளியிருக்கும் வீர ஆஞ்நேயர் கோவிலில், அனுமந்த ஜெயந்தி விழாவை முன்னிட்டு, வீர ஆஞ்நேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு, ஸ்வாமி புறப்பாடு நடந்தது.தெற்கு செங்குந்தர் தெரு, முதலியர் தெரு, மெயின் ரோடு, கடைத்தெரு, பங்களா தெரு ஆகிய தெருக்கள் வழியாக, ஸ்வாமி வீதியுலா, வாண வேடிக்கை முழங்க வெகுவிமர்சையாக நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம தலைவர் மகாலிங்கம், நாட்டண்மைகள் கண்ணன், ராஜேந்திரன், முருகன், அர்ச்சகர் கிருஷ்ணமுர்த்தி மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.ஆதனூர் ஸ்ரீ சுதர்சன கர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமந்த ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஸ்ரீசுதர்சன கர ஆஞ்சநேயருக்கு காலை முதல் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், அதைத்தொடர்ந்து தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.