விருத்தாசலம் அங்காளம்மன் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
ADDED :4334 days ago
விருத்தாசலம்: அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு அமாவாசையின் போதும் ஊஞ்சல் உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இரவு 7 மணிக்குமேல் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அங்காளம்மன் பல்லக்கில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.