ஜோதிர்லிங்க தரிசனகண்கொள்ளா காட்சி
அனுப்பர்பாளையம் திருப்பூர் பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம் சார்பில், 12 ஜோதிர்லிங்க தரிசனம், முத்தண்ண செட்டியார் திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது; வரும் 7ம் தேதி வரை, காலை 8.00 முதல் இரவு 9.00 மணி வரை நடக்கிறது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது.மண்டல பொறுப்பாளர் ரேணுகாஜி தலைமை வகித்தார். அலகுமலை தபோவன சேவாஸ்ரம நிறுவனர் குகப்பிரியானந்த சரஸ்வதி, ஆசீர்வாத உரையாற்றினார். கோவை கே.ஜி., மருத்துவமனை சேர்மன் பக்தவச்சலம் பேசினார். கண்காட்சியில், 12 ஜோதிர்லிங்க கோவில் மாதிரிகள் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளன. அதன் அருகில், ஒவ்வொரு கோவிலின் சிறப்பு எழுதி வைக்கப்பட்டுள்ளன. ஆன்மிக படவிளக்க கண்காட்சி, தியான குடில், ஒலி, ஒளி காட்சி நடைபெறுகிறது. தினமும் மாலை நேரத்தில், தேவியரின் தத்ரூப காட்சிகள், கயிலாயக்காட்சி மற்றும் பள்ளி குழந்தைகளின் நடன, நாட்டிய கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.