உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூரில் மார்கழி மாத பஜனை

திருக்கோவிலூரில் மார்கழி மாத பஜனை

திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் பஜனைக் குழுவினருடன் அரிஜன சேவா சங்க உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் இணைந்து மார்கழி மாத பஜனை ஊர்வலம் நடத்தி வருகின்றனர்.மார்கழி மாதத்தை முன்னிட்டு திருக்கோவிலூரில் உலகளந்தபெருமாள் கோவில் பஜனைக் குழுவினர் அதிகாலை 4 மணிக்கு குளித்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு முக்கிய வீதிகள் வழியாக பஜனைப் பாடல்களை பாடிச் செல்கின்றனர்.இவர்களுடன் அரிஜன சேவாசங்க உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்கள் 25க் கும் மேற்பட்டவர்கள் தினசரி பஜனையில் கலந்து கொள்கின்றனர்.ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரி சுவாமிகளின் ஆசியுடன் நடக்கும் இப்பஜனைக் குழுவினர்களுக்கு பக்தர்களும், பொதுமக்களும் ஆதரவு அளித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !