சஞ்ஜீவிராயர் கோவிலில்அனுமந்த் ஜெயந்தி விழா
ADDED :4400 days ago
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம் சஞ்ஜீவிராயர் கோவிலில் கடந்த 1ம் தேதி அனுமந்த் ஜெயந்தி விழா நடந்தது.காலை 10 மணிக்கு மகா சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், காயத்திரி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடந்தது. பின், காலை 11 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் சீத்தா சமேத ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது.மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவர் சீத்தா ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் உள்புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை ஜானகிராமன், சீனுவாசன் பட்டாச்சாரியார்கள் மற்றும் கிராம மக்கள் செய்தனர்.