ரத ஊர்வலம்
ADDED :4399 days ago
உளுந்தூர்பேட்டை: எலவனாசூர்கோட்டையில் விவேகானந்தர் 150வது ஜெயந்தி விழாவையொட்டி இளைஞர்களுக்கான விவேகானந்தர் வழியில் விவேகானந்தர் சங்கம ரதம் ஊர்வலம் நடந்தது. ஊராட்சித் தலைவர் ஜெயாஜெகன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அருள்மோகன் வரவேற்றார். கீழப்பாளையம், நொனையவாடி, மலையனூர், புத்தமங்கலம், நெடுமானூர், கொட்டையூர் கிராமங்களுக்கு ரத ஊர்வலம் நடந்தது. இறுதியாக நாளை(5ம் தேதி) மாலை 4 மணிக்கு உளுந்தூர்பேட்டையில் விவேகானந்தர் வழியில் விவேகானந்தர் சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது.