உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆலகிராம கோவிலில்புத்தாண்டு வழிபாடு

ஆலகிராம கோவிலில்புத்தாண்டு வழிபாடு

மயிலம்,: மயிலம் அடுத்த ஆலகிராமம் கோவில்களில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது.ஆலகிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சோழர் கால எமதண்டீஸ்வரர் கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு வழிபாடு,அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பின்பு அமாவாசையை முன்னிட்டு மார்க்கண்டேயர் வழிபாடு நடந்தது.ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் நேற்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. பின்பு சுவாமி திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவிலில் உள்ள வீர ஆஞ்சநேயர் சுவாமி வெண்ணைக் காப்பு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு காட்சியளித்தார். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !