உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பாவை குழு பாதயாத்திரை சிவகாசியில் நாளை நடக்கிறது

திருப்பாவை குழு பாதயாத்திரை சிவகாசியில் நாளை நடக்கிறது

சிவகாசி:சிவகாசியில் திருப்பாவை, திருவெம்பாவை திருவிழா குழுவின் சார்பில், 23 வது ஆண்டு புனித பாதயாத்திரை, ஜன., 5ல் நடைபெற உள்ளது. சிவகாசி சிவசுப்பிரமணியசாமி கோயிலில் இருந்து, அதிகாலை 5 மணிக்கு ஆராதனை பூஜையுடன் புறப்பட்டு, மல்லி, ஆண்டாள் கோயில், மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்று சுவாமி தரிசனம் செய்து திரும்புகின்றனர். பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு மல்லி, முள்ளிகுளம் தென்பழனி பாலமுருகன் கோயில் காலை அன்னதானமும், மதியம் மடவார் வளாகம், வைத்தியநாதசாமி கோயிலில் அன்னதானம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை திருப்பாவை, திருவெம்பாவை பக்தர்கள் பாதயாத்திரை குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !