திருத்தணி:முருகன் கோவிலில் புத்தாண்டு தரிசனம்: உண்டியல் வசூல் ரூ.25 லட்சம்
ADDED :4334 days ago
திருத்தணி:முருகன் கோவிலில் நடந்த படித்திருவிழா மற்றும் புத்தாண்டு சிறப்பு தரிசனத்தில், 25 லட்சம் ரூபாய் ரொக்கம், 127 கிராம் தங்கம் மற்றும் 486 கிராம் ?வள்ளி ஆகியவை, உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளன. திருத்தணி முருகன் கோவிலில், கடந்த, டிச., 31ம் தேதி, திருப்படித் திருவிழாவும், ஜன., 1ம் தேதி, புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடந்தது. இதில், 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, மலைக்கோவிலில் உள்ள உண்டியல்களில் காணிக்கை அளித்தனர்.இந்த உண்டியல்கள், நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. இவற்றில், 25.16 லட்சம் ரூபாய் ரொக்கம், 127 கிராம் தங்கம் மற்றும் 486 கிராம் ?வள்ளி ஆகியவை இருந்தன.