பழநி தைப்பூச திருவிழா: இடும்பன் குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுமா?
ADDED :4409 days ago
பழநி: பழநியில் நடக்கும் தைப்பூச திருவிழாவின் போது வரதமாநதி அணையில் இருந்து இடும்பன் குளத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். பழநி தைப்பூச திருவிழாவிற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழநி முருகன் கோவிலுக்கு செல்வதற்கு முன்பு அருகே உள்ள இடும்பன் கோவிலுக்கு சென்று அங்குள்ள குளத்தில் நீராடி வழிபாடு நடத்திய பின்னர் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் இந்த குளம் நீரின்றி வறண்டு காட்சியளிக்கிறது. எனவே வரதமாநதி அணையில் இருந்து இடும்பன் குளத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.