உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பெருமாள் கோவில்11ல் சொர்க்கவாசல் திறப்பு

தஞ்சை பெருமாள் கோவில்11ல் சொர்க்கவாசல் திறப்பு

தஞ்சாவூர்: பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், வரும், 11ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது.தஞ்சை மானம்புசாவடியிலுள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், வரும், 11ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. வைகுண்ட ஏகாதசி விழா வரும், 10ம் தேதி காலை, 9.30 மணிக்கு துவங்குகிறது. இரவு, 8 மணிக்கு மோகினி அலங்கார நாச்சியார் கோலத்துடன், பெருமாள் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, 11ம் தேதி அதிகாலை, நான்கு மணிக்கு திருமஞ்சன ஸேவை நடக்கிறது. காலை, 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
அப்போது சொர்க்கவாசல் வழியாக பெருமாள் ஸ்வாமி பிரவேசம் செய்து, வசந்த மண்டபத்தை வந்தடைகிறார். இரவு, 9 மணிக்கு வசந்த மண்டபத்தில் இருந்து ஸ்வாமி புறப்பாடு நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் வைகுண்ட ஏகாதசி கமிட்டியினர், பக்தர்கள் இணைந்து செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !