உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் இன்று 6 மணி நேரம் தரிசனம் ரத்து!

திருப்பதியில் இன்று 6 மணி நேரம் தரிசனம் ரத்து!

திருப்பதி: திருமலை ஏழுமலையான் தரிசனம் இன்று, ஆறு மணி நேரம் ரத்து செய்யப்படுகிறது. திருமலை ஏழுமலையான் கோவிலில், ஆண்டுக்கு, நான்கு முறை, கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். அதன்படி, இம்மாதம், 11ம் தேதி, வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு, அதற்கு முன், இன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.மேலும், கோவில் முழுவதும், கருவறை முதல் கோவில் முன்வாசல் வரை, மூலிகை மற்றும் வாசனை திரவியங்களால், தூய்மை செய்யப்பட உள்ளதால், காலை, 6:00 மணி முதல் பகல், 12:00 மணி வரை, அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !