உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரம் கோவில் தைப்பூச திருவிழா இன்று துவக்கம்!

சமயபுரம் கோவில் தைப்பூச திருவிழா இன்று துவக்கம்!

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை கமிஷனர் தென்னரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இன்று காலை,7.30 மணி முதல் 9 மணிக்குள் கொடியேற்றத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச திருவிழா துவங்குகிறது. மாலை,5 மணிக்கு அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடக்கிறது. இரவு,8 மணிக்கு அம்பாள் மர கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று இரவு, 9 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.

நாளை காலை, 10 மணிக்கு அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8 மணிக்கு மர சிம்ம வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. தொடர்ந்து தினமும் திருவீதி உலாவும் சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. வரும்,15ம் தேதி இரவு,8 மணிக்கு தெப்ப உற்சவமும், 16ம் தேதி கண்ணாடி பல்லக்கில் அம்பாள் புறப்பட்டு இரவு வடதிரு காவிரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சியை கண்டருளி, சகோதரரான ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் சீர் பெறும் நிகழ்ச்சி நடக்கிறது. 17ம் தேதி கொடி இறக்கத்துடன் தைப்பூச விழா நிறைவு பெறுகிறது. தைப்பூச திருவிழாவின் ஒரு நிகழ்ச்சியாக, 16ம் தேதி கொள்ளிடம் வட காவிரியில் தீர்த்தவாரி கண்டருள அம்பாள் செல்வதால் அன்று மாலை, 4 மணிக்கு சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை சாத்தப்படும். பின்னர், 17ம் தேதி காலை, 5.30 மணிக்கு வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு மூலஸ்தான சேவை நடைபெறும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !