வைகுண்ட ஏகாதசிக்கு 70 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி
ADDED :4331 days ago
விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்ட வாச பெருமாள் கோவிலில் நடக்கும் ஏகாதசி விழாவில், பக்தர்களுக்கு வழங்க 70 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. விழுப்புரம் வைகுண்ட வாசப் பெருமாள் கோவிலில் வரும் 11ம் தேதி காலை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு, 22ம் ஆண்டாக லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.திருமஞ்சன கமிட்டி நிர்வாகிகள் ஜோதி தலைமையில் கலியபெருமாள், சித்திரவேல், கோவிந்தன், துரைக்கண்ணு, பாலு, கருணாநிதி, தண்டபாணி மற்றும் அப்பகுதி பிரமுகர்கள் இதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். சூர்யநாராயணன் தலைமையில் தொழிலாளர்கள் 70 ஆயிரம் லட்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.