உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆலாத்தூர் கோவிலில் 11ம் தேதி திருக்கல்யாணம்

ஆலாத்தூர் கோவிலில் 11ம் தேதி திருக்கல்யாணம்

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த ஆலாத்தூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ நாராயணமூர்த்தி கோவிலில் வரும் 11ம் தேதி ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. விழாவையொட்டி, 11ம் தேதி மாலை 4 மணிக்கு திருமஞ்சனமும், 5 மணிக்கு சுவாமி அலங்காரமும், 6 மணிக்கு புருஷோத்தமன் வில்லிசை சொற்பொழிவும் நடக்கிறது. பின், இரவு 7:30 மணிக்கு பெண் அழைப்பும், 8 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், 8:30 மணிக்கு ஆண்டார் மகேஸ்வர பூஜையும், 10 மணிக்கு காணை சத்தியராஜ் குழுவினரின் மேடை நாடகம் நடக்கிறது.தொடர்ந்து 12ம் தேதி காலை 4:30 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !