செஞ்சியில் 11ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு
ADDED :4308 days ago
செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 11ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.செஞ்சியை அடுத்த சிங்கவரம் மலை மீது பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி வரும் 11ம் தேதி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு 10ம் தேதி இரவு ரங்கநாதருக்கு தைல காப்பும், மறுநாள் (11ம்தேதி) அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினரும், சிங்கவரம் கிராம மக்களும் செய்து வருகின்றனர். விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் செஞ்சியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.